Skip to main content

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, பதட்டத்தில் அயோத்தி!


இந்தியா:

அயோத்தியில் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாட்கள் நடத்தி முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங், எந்தச் சூழ்நிலையிலும் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனக் கூறினார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (NSA) அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இச்சட்டத்தின் படி முன்னெச்சரிக்கையாக ஒரு நபரைக் கைது செய்து 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும்.

இதனிடையே கடவுள்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பக் கூடாது என அம்மாநில அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments