Skip to main content

Posts

Showing posts from December, 2020

தேசிய விவசாயிகள் தினம்!

டிசம்பர் 23, (இன்று) தேசிய விவசாயிகள் தினம் ! முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த நாளையே 2001 -ம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது. சவுத்ரி சரண் சிங் ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தார். 10-க்கு மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு. நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்ததோடு, 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். விவசாயிகளின் நலன்களுக்காக அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வை அறிமுகப்படுத்தியது விவசாயிகள் நலனில் முக்கிய அம்சங்களாகும். உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளா