Skip to main content

Posts

Showing posts from November, 2019

குடிக்க சொல்லித் தரும் கேரள பள்ளிகள்!

இந்தியா: தமிழகத்தில் அரசாங்கமே நடத்திவரும் 'டாஸ்மார்க்' கில் பண்டிகை தின வருமானமே பலநூறு கோடிகளை தாண்டி அகல பாதாளத்தில் தமிழர்களின் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழலில் அது மெல்ல கல்லூரி மாணவர்களை தாண்டி பள்ளி மாணவர்கள், பெண்கள் என தனது கோரக் கரங்களை நீட்டி வருகிறது. இந்தநிலையில் தான் கேரள பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மாணவ, மாணவியர் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு, நீர் மணி (வாட்டர் பெல்) முறையை கொண்டு வந்து நாளொன்றுக்கு இரண்டல்லது மூன்று முறை மணி அடிக்கப்படுகிறது. அப்போது அனைவரும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தபட்ட பள்ளிகள் கூறும்போது, வீட்டிலிருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீருடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பலர் இதை குடிப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், குழந்தைகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன. எனவே, மாணவர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இதனை நடைமுறைபடுத்தும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சமூக ஊடகங்களின் வாய

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, பதட்டத்தில் அயோத்தி!

இந்தியா: அயோத்தியில் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாட்கள் நடத்தி முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங், எந்தச் சூழ்நிலையிலும் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனக் கூறினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (NSA) அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இச்சட்டத்தின் படி முன்னெச்சரிக்கையாக ஒரு நபரைக் கைது செய்து 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இதனிடையே கடவுள்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பக் கூடாது என அம்மாநில அரசு கண்டிப