Skip to main content

Posts

Showing posts from October, 2019

'ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா' -ராஜஸ்தான் முதல்வர் எச்சரிக்கை!

இந்தியா, இந்தியா ஒரு கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:-  "பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் (பாஜக) வழிநடத்தி வருகின்றனர். சீனாவைப்போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

திருச்சியில், 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

தமிழகம்: திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் நடைபெற்றது. ஒழுங்காற்று குழுவின் செயலாளர் நவீன்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம் பக்சிங், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில நீர்வள ஆதார அமைப்பின் தலைமை அதிகாரிகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மழைப்பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதிக்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுவரை டெல்லி மற்றும் பெங்களூரில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்முறையாக இக்கூட்டம் தமிழகத்தில் நடைப்பெறுவது குறிப்

டிச.01 முதல் சுங்கச்சாவடிகளை கடக்க இது கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை!

இந்தியா: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல்பிளாசாக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. அன்று முதல் டிஜிட்டல் பணபரிமாற்றத்துக்கு மக்களை மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல்பிளாசாக்களில் பாஸ்ட்டேக் மின்னணு அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை பரிசோதனை முறையில் நடைமுறைக்கு வந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல்பிளாசாக்களில் இம்முறையை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல்பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன

'அகழாய்வு' மத்திய தொல்லியல் துறை அனுமதி பெற்ற தமிழக தொல்லியல் துறை!

தமிழகம்: தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்ற பல்வேறு சங்க இலக்கியங்கள் இருக்கின்ற போதிலும் நாம் கூறுவதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள இலக்கியங்கள் பேசுகின்ற வாழ்க்கை முறையை அகழாய்வுகளின் மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 40 வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் அழகன்குளம் பட்டறைபெரும்புதூர் மற்றும் கீழடி ஆகிய தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் 55 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற ஆய்வில் தமிழகத்திற்கும் ரோம நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததற்கான பொருட்கள் கிடைக்கப்பெற்றன. சிவங்கை மாவட்டம் கீழடியில் 103 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்றும் வைகை ஆற்றங்கரையோரம் அக் காலத்திலேயே நகர நாகரிகம் தழைத்தோங்கி இருந்தது என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

'மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான நிலத்தினை இலவசமாக தர தயார்' நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்த நீடூர் முஸ்லிம்கள்!

தமிழகம்: அக்-24, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நாகை அருகே ஒரத்தூரில் இடம் தேர்வு செய்துள்ள நிலையில், அக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரி தொடங்க சுமார் 20 ஏக்கர் நிலத்தை நாகை அருகே ஒரத்தூரில் மாவட்ட நிர்வாகத்தால் இடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மயிலாடுதுறை உட்கோட்டத்தில் வசிக்கும் மக்களின் நீண்டகால கனவான மருத்துவக் கல்லூரி அமைய இடம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதிய நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக தர முன்வந்துள்ளது. இதுபற்றி ஜே.எம்.எச். நீடூர் அரபிக்கல்லூரி டிரஸ்ட்டின் செயலாளர் எஸ்கொயர்.சாதிக் நம்மிடம், ``நூற்றாண்டைக் கடந்த எங்கள் அரபிக்கல்லூரி சார்பாகவே மருத்துவக்கல்லூரி அமைக்க முயன்றோம். முடியவில்லை. தற்போது அரசே தொடங்க முன்வருவதாலும், மயிலாடுதுறை அருகே போதுமான இடம் தேவைப்படுவதாலும் எங்க நிர்வாகம் தாமாகவே முன் வந்து மருத்துவக்கல்லூரி அமைய 20 ஏக்கர் இடத்தை நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளோம். அதற்கான அனுமதி கடிதத்தை

முதலிடத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த 'வாரணாசி'

இந்தியா: இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்துள்ள நகரமாக, காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தரபிரதேசத்தின் வாரணாசி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது 2014 மற்றும் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியைத் தொடர்ந்து 269 புள்ளிகளுடன் லக்னோ இரண்டாவது இடத்தையும், 266 புள்ளிகளுடன் முஸாஃபர் நகர் மூன்றாவது இடத்தையும், 264 புள்ளிகளுடன் ஹரியானாவின் யமுனா நகர் நான்காவது இடத்தையும், 256 புள்ளிகளுடன் உத்தரபிரதேசத்தின் மொரதாபாத் 5வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று லக்னோ நகரத்தின் காற்று தரத்தின் அளவு அபாய கட்டமான 294 ஐ தாண்டியது. பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் 269 புள்ளிகளுக்கு குறைந்துள்ளது. இந்த மாற்றமானது தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காலநிலை மற்றும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் பேராசிரியர் துருவ்சென் சிங், தீபாவளி பண்ட

2020 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை -தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை? என்ற பட்டியலை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று வெளியிட்டார். அந்த அரசாணையில், 2020-ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசால் அறிவிக்கப்படுகிறது. நாள், பொது விடுமுறைக்கான காரணம், கிழமை விவரம் வருமாறு:- ஜனவரி 1-ந்தேதி - ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை ஜனவரி 15-ந்தேதி - பொங்கல் - புதன்கிழமை ஜனவரி 16-ந்தேதி - திருவள்ளுவர் தினம் - வியாழக்கிழமை ஜனவரி 17-ந்தேதி - உழவர் திருநாள் - வெள்ளிக்கிழமை ஜனவரி 26-ந்தேதி - குடியரசு தினம் - ஞாயிற்றுக்கிழமை மார்ச் 25-ந்தேதி - தெலுங்கு வருடப்பிறப்பு - புதன்கிழமை ஏப்ரல் 1-ந்தேதி - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - புதன்கிழமை ஏப்ரல் 6-ந்தேதி - மகாவீர் ஜெயந்தி - திங்கட்கிழமை ஏப்ரல் 10-ந்தேதி - புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை ஏப்ரல் 14-ந்தேதி - தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கார் பிறந்த தினம் - செவ்வாய்க்கிழமை மே 1-ந்தேதி - மே தினம் - வெள்ளிக்கிழமை மே 25-ந்தேதி - ரம்ஜான் - திங்கட்கிழமை ஆகஸ்டு 1-ந்தேதி - பக்ரீத் - சனிக்கிழமை ஆகஸ

மலேசியாவுடன் இந்தியா வர்த்தகப் போர் பாதிப்பு யாருக்கு?

உலகம்: காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74 வது பொதுச்சபை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா வின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் ஐநாவின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது என்பது சட்ட நீதியைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டிருந்தார். மலேசிய பிரதமரின் கருத்து இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை  குறைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் இருந்து அதிகம் பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கும் இந்தியா, இறக்குமதியை  நிறுத்தும் பட்சத்தில் அந்நாட்டின் வர்த்தகத்தில

கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தேர்வு !

உலகம்: கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 338 உறுப்பினர்களை கொண்ட கனடா மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது. லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சிறு கட்சிகளுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார். இந்த தேர்தல் வெற்றியை லிபரல் கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலமாக மீண்டும் கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தேர்வாகியுள்ளார்.

10, 11, 12 ம் வகுப்பு தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்தது பள்ளி கல்வித்துறை

தமிழகம்: 10, 11, 12-ம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்துடன் கூடுதலாக அரை மணி நேரம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள் ! -பிரதமர் டிவிட்டரில் பதிவு

இந்தியா : டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.  இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.  அதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது  பார்வை தெளிவாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறினார். பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார்.  

மத்திய மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெறும்.

சென்னை, மத்திய மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெறும். அரபிக் கடலில் தொடர்ந்து அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.